மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் 13 நாய், பூனைக்குட்டிகளை கடத்த முற்பட்டவருக்கு சிறை

லேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் 10 நாய்க் குட்டிகளையும் 3 பூனைக் குட்டிகளையும் கடத்த முற்பட்ட 25 வயது வோங் காய் லாங்கிற்கு 40 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தச்சுத் தொழில் செய்யும் அந்த ஆடவர் தனது வாகனத்தில் உள்ள பயணிகள் இருக்கையின்கீழ் மாற்றியமைக்கப்பட்ட பெட்டி ஒன்றில் அவற்றைக் கடத்தி வந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டது. தன்மீது சுமத்தப்பட்ட பத்துக் குற்றச்சாட்டுகளை வோங் ஒப்புக்கொண்டார்.

அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற 16 குற்றச்சாட்டுகளும் கருத்தில்கொண்டு, அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

முன்னர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட வழக்கமான சோதனையின்போது வோங் காய் லாங்கை அதிகாரிகள் கைது செய்தனர்.

கடத்திவரப்பட்ட ஐந்து நாய்க் குட்டிகள் நிமோனியா நோய்த்தொற்றால் இரண்டு வாரங்களில் இறந்ததாகவும் ஒரு பூனைக்குட்டி நைலோன் பையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here