பேட்மிண்டன் ஜாம்பவான் மறைந்த பஞ்ச் குணாளனுக்கு KL பேட்மிண்டன் சங்கம் அஞ்சலி

கோலாலம்பூர்,
பேட்மிண்டன் ஜாம்பவான் மறைந்த டத்தோ பஞ்ச் குணாளனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கோலாலம்பூர் பூப்பந்து சங்கம் (KLBA) இன்று Titiwangsa வில் அவருக்கு சிறப்பு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தது.

சர்வதேச அரங்கில் தேசத்திற்கு மகத்தான பெருமை சேர்த்த குணாளனின் சாத னைகள் மற்றும் பங்களிப்புகளை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்வு நடத்தப் பட்டது. KLBA தலைவர் டத்தோஸ்ரீ ஜஹபர்தீன் முகமது யூனூஸ், தேசிய மற்றும் சர்வ தேச அளவில் பூப்பந்து துறையில் அவரது பங்களிப்பை பாராட்டி பஞ்ச் குணாளனின் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் முகமாக இந்த முயற்சியை எடுத்துரைத்தார்.

KLBA , பேட்மிண்டன் அசோசியேஷன் ஆஃப் மலேஷியா (BAM), பேட்மிண்டன் வேர்ல்ட் ஃபெடரேஷன் (BWF) ஆகியவற்றில் பேட்மிண்டன் விளையாட்டு நிர்வாகத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு மேலதிகமாக அவரது சாதனைகள் பற்றியும் மக்கள் அறிவார்கள். டத்தோ பஞ்ச் குணாளனும் KLBA இன் முன்னாள் தலைவராக இருந்தார், எனவே அவருக்கு மரியாதை செலுத்துவது எங்கலின் கடமையாகும்” என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் தனது மகன் கலாநிதி ஜி.ரோஷனுடன் கலந்துகொண்ட பஞ்ச் குணா ளனின் மனைவி டத்தின் பி.விஜேயகுமாரிக்கு நினைவுப் சின்னத்தை வழங்கி வைத்த பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“இன்று இந்த நிகழ்வை நடத்தியதற்காக KLBA க்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், இது என்னை மிகவும் தொட்டது,” என்று விஜயகுமாரி கூறினார்.

குணாளன், தனிநபர் மற்றும் குழு ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க திறமை வாய்ந்த பூப்பந்து வீரரானார், பல்வேறு சர்வதேச பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி களில் நாட்டிற்காக பல பதக்கங்களைப் பெற்றார்.அவர் 1985 முதல் 1997 வரை BAM இன் கெளரவ செயலாளராகவும் பணியாற்றினார் மற்றும் 2005 இல் தேசிய பூப்பந்து நிர்வாகக் குழுவின் துணைத் தலைவராக பதவி வகித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here