டிங்கி காய்ச்சல் பரவலைத் தடுக்க சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருங்கள்

ஜார்ஜ் டவுன்:
டிங்கி காய்ச்சல் பரவாமல் இருக்க, பொதுமக்கள், குறிப்பாக வெள்ள அபாய பகுதிகளில் வசிப்பவர்கள், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பதுடன் இது தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் ஆறு மாநிலங்களில் டிங்கி காய்சால் சம்பவங்கள் அதிகரித்து வருவதை சுகாதார அமைச்சகம் (MOH) கண்டறிந்துள்ளது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார்.

“வடகிழக்கு பருவமழை காரணமாக தண்ணீர் தேங்கி நிற்கிறதுடன் வெள்ளப்பெருக்கும் ஏற்படுகிறது, எனவே டிங்கி நோய் அதிகரிக்கிறது என்றார் அவர்.

சிலாங்கூர், பினாங்கு, பேராக், பகாங், சபா மற்றும் சரவாக் போன்ற மாநிலங்களில் டிங்கி காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது; இருப்பினும் நிலைமை இன்னும் கட்டுக்குள் உள்ளது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

டிங்கி காய்ச்சல் பரவாமல் இருக்க சுற்றுச்சூழலை, குறிப்பாக வீட்டை சுற்றியிள்ள பகுதிகளில் நீர் தேங்காது கவனிப்பது முக்கியம் என்று கூறிய டாக்டர் ஜாலிஹா, டிங்கி அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறவும் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here