6 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை -மலேசிய வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர்:

வம்பர் 23 வரை ஆறு மாநிலங்களில் மோசமான வானிலை மற்றும் தொடர் மழை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கிளந்தான், திரெங்கானு, பகாங், கெடா, பேராக் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று, அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“வானிலை மாதிரிகளின் பகுப்பாய்வு அடிப்படையில், நவம்பர் 22, 2023 வரை பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நவம்பர் 22 முதல் 23 வரை வடக்கு மலாக்கா நீரிணையில் தாழ் அமுக்க அமைப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் ஈரப்பதத்தின் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும் இது கிழக்கு கடற்கரை மற்றும் தீபகற்பத்தின் வடக்கில் தொடர்ச்சியான மழையை கொண்டு வரக்கூடும்” என்றும் அது அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில், தென் சீனக் கடலில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here