மூன்று மாநிலங்களுக்கு நாளை வரை தொடர் மழை எச்சரிக்கை

கோலாலம்பூர்:

கிளந்தான்,திரெங்கானு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களில் நாளை வரை தொடர் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை நிலையை வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) விடுத்துள்ளது.

தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பச்சோக், மாச்சாங், பாசீர் பூத்தே மற்றும் கோலக்கிராய் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என்றும், அதே நேரத்தில் குவாந்தானின் பல பகுதிகளும் இந்த வானிலையை எதிர்கொள்ளும் என்றும், வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக் ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும் அவ்வறிக்கையில் அது கூறியுள்ளது.

இந்நிலையில், தொடர் மழை எச்சரிக்கை கெடாவிலுள்ள குபாங் பாசு, கோத்த ஸ்டார், போக்கோக் சேனா, பாடாங் தெராப், யான், பெந்தோங், கோலா மூடா, சிக், பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாரு போன்ற பல பகுதிகளை உள்ளடக்கியது” என்று அது கூறியது.

பேராக்கில், கெரியான், லாரூட், மாடாங் மற்றும் செலாமா, உலு பேராக், கோலக் கங்சார் மற்றும் மஞ்சுங் ஆகிய இடங்களுக்கான தொடர் மழை எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here