கோலாலம்பூர்:
திரெங்கானு, கிளந்தான் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலைமை படிப்படியாக மீண்டு வருகிறது. வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள தற்காலிக வெளியேற்ற மையங்களில் தங்கியிருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு குறைந்துள்ளது.
அதனடிப்படையில், திரெங்கனுவில் வெள்ள நிலைமை ஏறக்குறைய முழுமையாக மீண்டுள்ளது. இரவு 8 மணி நிலவரப்படி, அங்கு 13 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் மட்டுமே தங்கியுள்ளனர் என்று திரெங்கானு மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBNT) செயலகம்தெரிவித்திட்டுள்ளது.
கிளந்தானில், நேற்றிரவு 7.32 நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 153 குடும்பங்களைச் சேர்ந்த 515 பேர் அங்குள்ள நான்கு PPSகளில் இன்னும் தங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், சிலாங்கூரில் நேற்று காலை பதிவான 29 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேருடன் ஒப்பிடுகையில் இரவு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேராக குறைந்துள்ளது.
JKM இன் பேரிடர் தகவல் இணையதளத்தின்படி, கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் PPS பலாய் ராயா ரந்தாவ் பாஞ்சாங் மூடப்பட்ட பிறகு, SK சுல்தான் அப்துல் அஜிஸ் PPS மட்டும் இன்னும் இயங்கி வருகிறது.