இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசை ஈரான் சிறையில் உள்ளநர்கீஸ் முகமதியின் மகன், மகள் பெற்றனர்

ஹெல்சின்கி:

ஈரான் சிறையில் உள்ள சமூக செயற்பாட்டாளர் நர்கீஸ் முகமதியின் மகனும், மகளும் நோபல் பரிசை பெற்று கொண்டனர். ஈரானை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நர்கீஸ் முகமதி (51). மகளிர் உரிமைகள், ஜனநாயக ஆட்சி மற்றும் மரண தண் டனைக்கு உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராடிய நர்கீசுக்கு ஈரான் அரசு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

டெஹ்ரான் சிறையில் உள்ள நர்கீஸ் முகமதிக்கு இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நர்கீஸின் கணவர் தாகி ரஹ்மானி மற்றும் மகன் அலி ரஹ் மானி, மகள் கியானா ரஹ்மானி ஆகியோர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வசித்து வருகின்றனர்.

நர்கீஸின் மகளான கியானா ரஹ்மானி,மகன் அலி ஆகியோர் நேற்றுமுன்தினம் கூறு கையில், ‘‘எங்கள் தாயை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் அது எங்களுக்கு பிரச்சினை இல்லை. அவர் எப்பொழுதும் எங்கள் இதயத்தில் இருப் பார்.

அவருடைய போராட்டங்களை நாங்கள் மதிக்கிறோம்’’ என்றனர். இந்த நிலையில் ஓஸ்லோவில் நடந்த விழாவில் நர்கீஸ் முகமதுக்கு அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை அவரது மகன்,மகள் ஆகியோர் பெற்று கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here