வெறும் 7 விழுக்காடு இந்தியர்களுக்கு பல அரசியல் கட்சிகள்: இது இந்தியர்களின் வாக்குகளை சிதறடிக்கும்

கோலாலம்பூர்:

உரிமை என்ற புதிய ஒரு கட்சி பேராசிரியர் முனைவர் பி.இராமசாமியால் தோற்று விக்கப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. இவ்வாறு புதிய புதிய கடசிகள் உதயமானால் அது இந்திய சமூகத்திற்குத் தான் பெரும் பாதிப்பாக அமையும். மேலும், இந்தியர்களின் நலன்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் என்று அரசியல் ஆய்வாளரான அவாங் அஸ்மான் பாவி கூறினார்.

இந்தியர்கலின் பங்களிப்பு என்பது டெர்ட்லைல் முக்கிய காரணியாக இருந்தாலும் நாட்டின் மக்கள் தொகையில் இந்தியர்கள் வெறும் ஏழு விழுக்காடு மட்டுமே உள்ள நிலையில், புதிய அரசியல் கட்சிகளினால் இந்தியர்களின் ஆதரவு பல்வேறு கட்சிகளி டையே பிளவுபட்டு எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறுவது என்பது பெரும் கேள்விகுறியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் அதிகப்படியான அரசியல் கட்சி இந்தியர்களுக்காக உள்ளதால் இந்திய சமூ கத்தின் குரல் ஒலிப்பதில் வலுவிழக்க நேரிடும் என்று பிரபல ஆங்கில இணைய ஊட கத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

முன்னதாக, உரிமை என்ற கட்சி பேராசிரியர் முனைவர் பி.இராமசாமி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமையன்று மலேசிய இந்திய மக்கள் கட்சி என்ற மற்றொரு இந்தியர் சார்ந்த அரசியல் கட்சி உதயமானது. இந்த கட்சி முன்னாள் ம.இ.கா பிரமுகரான புனிதன் தலைமையில் செயல்படுகிறது.

இவ்வாறு புதிய கட்சிகளின் வரவால் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் நாட்டில் மிகப் பெரிய ஆளுமையாக விளங்காது என தஸ்மானிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் சின் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here