200 ஆண்டுகள் பழமையான 220 டன் கட்டிடம் இடமாற்றம்; 700 சோப்புக்கட்டிகள் உதவியோடு சாதித்த பொறியாளர்கள்

கனடாவில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான, 220 டன் எடையிலான கட்டிடத்தை இடமாற்றம் செய்ய 700 சோப்புக்கட்டிகளை கொண்டு பொறியாளர்கள் புதுமையாக சாதித்துள்ளனர்.

நோவா ஸ்கோடியாவின் ஹாலிஃபாக்ஸில் உள்ளது விக்டோரியன் எல்ம்வுட் என்ற பிரம்மாண்ட கட்டிடம். ஹோட்டலாக செயல்பட்டு வந்த சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டிடம், அண்மையில் இடித்தாக வேண்டிய நெருக்கடியை எதிர்கொண்டது.

அதற்கு மாறாக கட்டிடத்தை இடம் பெயர்ப்பதன் மூலம் அதன் ஆயுளை அதிகரிக்க முடிவானது. இதற்கு வழக்கமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தாது, ஐவரி சோப்புக்கட்டிகளை உபயோகித்து கட்டிடத்தை அதன் மாற்றிடத்துக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here