கோலாலம்பூர்:
நேற்று புடு LRT ரயில் தண்டவாளப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததற்காக ஆடவர் ஒருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 300 வெள்ளி அபராதம் விதித்தது.
குற்றம் சாட்டப்பட்ட பெர்னாட் சுவா, 20, கடந்த டிசம்பர்.18 ஆம் தேதி மாலை 6.47 மணிக்கு, புடு LRT இரயில் பிளாட்பாரத்தில் நுழைந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, மாவட்ட நீதிமன்ற நீதிபதி இல்லி மரிஸ்கா கலிசான், அவருக்கு இத்தண்டணையை விதித்தார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 447 இன் கீழ் வரும் இக் குற்றச்சாட்டிற்கு, 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது RM1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும் இவ்வழக்கில், குற்றவாளி அபராதத்தை செலுத்த தவறினால் 7 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் குற்றவாளி அபராதத்தை செலுத்தினார் என அறியமுடிகிறது.























