லிவர்பூலைப் போராடி வென்ற பயர்ன் மியூனிக்

சிங்கப்பூர், ஆகஸ்ட்டு 3:

சிங்கப்பூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு நட்புமுறை காற்பந்தாட்டத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான லிவர்பூலை 4-3 எனும் கோல் கணக்கில் வென்றது ஜெர்மனியின் பயர்ன் மியூனிக்.

ஆட்டம் தொடங்கி இரண்டே நிமிடங்களுக்குள் லிவர்பூலை முன்னுக்கு அனுப்பினார் கொடி காக்போ. அதற்குப் பிறகு 28வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார் வெர்ஜில் வேன் டைக்.

33வது நிமிடத்தில் செர்ஜி நாப்ரி பயர்னுக்கு ஒரு கோலைப் போட்டார். பின்னர் 42வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் லிரோய் சானே.

66வது நிமிடத்தில் மீண்டும் லிவர்பூலை முன்னுக்கு அனுப்பினார் லூயிஸ் டியாஸ். எனினும், ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டு பயர்ன் வெற்றியைப் பறித்துக்கொண்டது.

80வது நிமிடத்தில் ஜோசிப் ஸ்டானிசிச் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். 91வது நிமிடத்தில் வெற்றி கோல் விழுந்தது. போட்டவர் ஃபிரான்ஸ் கிராட்ஸிக்.

ஆட்டம் சிங்கப்பூரின் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. சிங்கப்பூரில் நடைபெற்ற லிவர்பூலின் நட்புமுறைத் தொடரில் இதுவே கடைசி ஆட்டம்.

சென்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் சரியாக விளையாடாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்த லிவர்பூல் வரும் பருவத்தில் மீண்டுவந்து சீறிப் பாயும் எண்ணம் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here