நாடு முழுவதும் SPM எழுத்துத் தேர்வு சுமூகமாக நடந்து வருகிறது

கோலாலம்பூர்:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களான பகாங் மற்றும் திரெங்கானு உட்பட நாடு முழுவதும் உள்ள மொத்தம் 395,870 விண்ணப்பதாரர்கள் பங்கேற்ற 2023க்கான SPM எழுத்துப் பரீட்சை, இன்று காலை ஆரம்பித்து 3,340 தேர்வு மையங்களில் சுமூகமாக நடந்து வருகிறது.

“வெள்ளம் ஏற்பட்ட மாநிலங்களிலும் SPM தேர்வு நடைபெறுகிறது. இருப்பினும், அங்கு (பகாங், திரெங்கானு) வெள்ள நிலைமை கண்காணிக்கப்படுகிறது” என்று கல்வி துணை இயக்குநர் ஜெனரல் (பள்ளி செயல்பாட்டுத் துறை) அஸ்மான் அட்னான் தெரிவித்தார்.

ஜோகூரில் உள்ள நிலைமை குறித்து கருத்து தெரிவித்த அஸ்மான், பத்து பஹாட், குளுவாங், கோத்தா திங்கி, சிகாமாட், கூலாய், மற்றும் தாங்காக் ஆகிய இடங்களில் உள்ள 18 மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் வெள்ளம் ஏற்பட்டால் தற்காலிக நிவாரண மையங்களாக செயல்படத் தயாராக உள்ளன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here