பிப்ரவரி 10 அன்று MCA இன் சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு; பொதுமக்களுக்கு அழைப்பு

பெட்டாலிங் ஜெயா:

MCA தனது சீன புத்தாண்டு திறந்த இல்லத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு டேவான் சான் சூனில், விஸ்மா MCA ஜாலான் அம்பாங்கில் நடத்தவுள்ளது, இதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பார் எனக் கூறப்படுகிறது.

“சீன சமூகத்தின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவாக உள்ள இந்த மகிழ்ச்சியான நிகழ்வை எங்களுடன் கொண்டாட அனைத்து தரப்பு மக்களையும் நாங்கள் அழைக்கிறோம்” என்று MCA பொதுச்செயலாளர் டத்தோ சோங் சின் வூன் இந்து வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“இந்த பண்டிகைக் காலத்தில், இந்த திறந்த இல்ல நிகழ்வு அனைத்து இன மக்களும் விழாக்களில் பங்கேற்கவும், மகிழ்ச்சியில் பங்கு கொள்ளவும், பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே புரிதல் மற்றும் உரையாடல்களை மேம்படுத்தி, ஒட்டுமொத்தமாக மிகவும் இணக்கமான, உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கும் என்று நம்புகிறோம்.

“புதிய ஆண்டில், நமது குடிமக்கள் அமைதியுடனும், மனநிறைவுடனும் வாழவும், நாடு சாதகமான காலநிலை, வளமான அறுவடை, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார செழிப்பு ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றும் MCA விரும்புகிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here