இடிந்து விழுந்த பாகோ பாறை ; பெரிய அலைகளின் தாக்குதலே காரணம் என்கிறது வனத்துறை

கோலாலம்பூர்:

சரவாக் சுற்றுலாத்துறையின் அடையாளமாக உயர்ந்து நின்ற, பாகோ தேசிய பூங்காவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘The Cobra Head Sea Stack’ எனும் பாறை நேற்று திடீரென்று இடிந்து விழுந்தது. இதற்கு மிகப்பெரிய அலைகளின் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என சரவா வனத்துறை தெரிவித்துள்ளது.

இந்த கடற்பாறை அல்லது அடுக்கு நாட்டின் புவியியல் பொக்கிஷங்களில் ஒன்றாகும். இது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மணற்கல்லில் இருந்து உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்துவமான கடல் கோபுரத்தை உருவாக்கும் பாறைத் தலைப்பகுதி, கடல் வளைவு என்பன அதிகம் சுற்றுலாப் பயணிகளை கவரும் அம்சமாக விளங்கின.

இந்த நிலையில் இப்பாறை நேற்று மாலை சுமார் 4 மணியளவில் இடிந்து விழுந்ததாக அங்குள்ள வழிகாட்டி ஒருவரால் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்று வனத்துறை மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here