பெட்டாலிங் ஜெயா:
சிறப்பு வாகன எண்ணுக்கான ஏலத்தில் RM1.5 மில்லியனை செலுத்தி, “GOLD 1” நம்பர் பிளேட்டினை வெற்றிகரமாக பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சொந்தமாக்கிக் கொண்டார்.
இது நாட்டிலேயே நம்பர் பிளேட்டுக்கு செலுத்தப்பட்ட மிக உயர்ந்த தொகையையாகும், மேலும் இந்த ஏலப் பணம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
இஸ்தானா நெகாராவில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கை மாட்சிமை தங்கிய பேரரசர் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் லோக், குறித்த நம்பர் பிளேட்டை பேரரசரிடம் வழங்கினார்.
முன்னதாக 50ஆவது கூட்டரசு பிரதேச தின பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தச் சிறப்பு நம்பர் பிளேட் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தது.




















