கோலாலம்பூர்:
இன்று ஆரம்பமாகியுள்ள 15ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான முதலாவது அமர்விற்கு தலைமை தாங்கினார் மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தலைமை தாங்கி, அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
நாட்டில் பொருட்களை குறிப்பாக தினசரி உணவுப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளையும் ஊக்குவிப்பையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான அரசாங்கம், அதிகரிக்க வேண்டும் என்று மாமன்னர் அழைப்பு விடுத்தார்.
நாட்டின் உணவுத்தேவை அளவு அதன் இலக்கை அடைவதை உறுதி செய்வதற்காக உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
“அதே நேரத்தில், விவசாயிகள், பண்ணையாளர்கள், மீனவர்கள் மற்றும் உணவு உற்பத்தியாளர்களின் சுமையை குறைக்க பல்வேறு திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும், இதனால் அவர்களின் உற்பத்தி மற்றும் வருமானம் உயர் மட்டத்தில் இருக்கும்.
“இறக்குமதியின் விலை அதிகரித்து வருவதால், நாட்டில் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், குறிப்பாக தினசரி உணவுப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை ஊக்குவிக்கவும் வேண்டும் என்று நான் அரசாங்கத்திடம் அறிவுறுத்துகிறேன்,” என்று, இன்று 15வது பாராளுமன்றத்தின் மூன்றாவது தவணையின் முதலாவது கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.




















