ஈப்போவில் உள்ள மைடின் ஹைப்பர் மார்க்கெட்டில் தீ

ஈப்போ:

நேற்றிரவு 7 மணியளவில் மஞ்சோய் நகரில் உள்ள மைடின் ஹைப்பர் மார்க்கெட்டில் தீப்பரவல் ஏற்பட்டது.

குறித்த சம்பவ தொடர்பில் இரவு 7.09 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், உடனே ஈப்போ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது என்று, பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) சபரோத்ஸி நோர் அஹ்மட் கூறினார்.

“தீ ஏற்படுவதற்கு முன்னதாக TNB சுவிட்ச் அறையில் புகை காணப்பட்டதாக அறியமுடிகிறது” என்றும், இச்சம்பவத்தில் எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், மைடின் ஹைப்பர் மார்க்கெட்டின் இரண்டாவது மாடியில் உள்ள சேமிப்புப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது என்று, பெயர் குறிப்பிட மறுத்த காவலர் ஒருவர் கூறினார்.

தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து, வளாகத்திலிருந்து வாடிக்கையாளர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியது மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் நுழைவதைத் தடுத்தது, என்றார்.

தீயணைப்பு நடவடிக்கையில் 70 தீயணைப்பு வீரர்கள், 22 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 123 பணியாளர்கள் ஈடுப்பட்டனர். இன்று அதிகாலை 12.55 மணி நிலவரப்படி, ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது என்றும், ஆனால் முழுமையாக அணைக்கப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here