கடத்தல் கும்பலைச் சேர்ந்த 11 பேர் கைது; 6 மில்லியன் மதிப்பிலான கார்கள் பறிமுதல்

புத்ராஜெயா:

நாட்டிற்குள் புகையிலை, சிகரெட் மற்றும் மதுபானங்களை கடத்தி வந்ததாக நம்பப்படும் கும்பலைச் சேர்ந்த 11 பேரை மலேசியா ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில், குறித்த கும்பலுடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமானது என்று நம்பப்படும் இரு லம்போஜினி கார்கள் உட்பட மொத்தம் எட்டு சொகுசு கார்களும் கைப்பற்றப்பட்டன.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உள்நாட்டு வருவாய் வாரியம் மற்றும் பேங்க் நெகாரா ஆகியவை இணைந்து, சமீபத்தில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின்போது, இந்த RM6 இலட்சம் மதிப்புள்ள சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

“இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பணமோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது” என்றும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கடந்த வாரத்தில் 5 அரசு ஊழியர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதேநேரத்தில் இந்தக் கடத்தல்களுக்கு துணைபோவதற்காக அரசு ஊழியர்கள் உட்பட பலருக்கு 8 மில்லியன் ரிங்கிட் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கும்பல் கடந்த 2018 முதல் கடந்த ஆண்டு வரை செயல்பட்டதாக நம்பப்படுகிறது.

30-50 வயதுடைய 11 பேரும் கைது செய்யப்பட்டதையும், சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் MACC பணமோசடி தடுப்பு பிரிவு இயக்குனர் டத்தோ முகமட் ஜம்ரி ஜைனுல் ஆபிடின் உறுதிச் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here