60 ஆண்டுகால  சாதனையை முறியடித்த  ஹெரி கேன்

ஜெர்மன் கால்பந்து போட்டியில் முதல் தவணையிலேயே அதிக கோல்கள் புகுத்தியதற்கான 60 ஆண்டுகால சாதனையை ஹெரி கேன் முறியடித்துள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அவர் விளையாடி வரும் பயர்ன் முனிச் அணி 5-2 என்ற கோல் கணக்கில் டர்ம்ஸ்டார்ட் அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் ஹெரி கேன் ஒரு கோல் புகுத்தினார். முன்னதாக கடந்த தவணையில் பயர்ன் முனிச் அணியில் இணைந்தார். அதிலிருந்து இதுவரை அவர் பயர்ன் முனிச் அணியுடன் 26 ஆட்டங்களில் களம் இறங்கியுள்ளார்.

இந்த 26 ஆட்டங்களில் ஹெரி கேன் மொத்தமாக 31 கோல்கள் புகுத்தியுள்ளார். இதற்கு முன்னதாக 1963 – 64 ஆம் ஆண்டு தவணையில் ஜெர்மன் ஜாம்பாவான் சீலர் ஹம்பர்க் அணிக்காக 30 கோல்கள் புகுத்தி (முதல் தவணையில்) சாதனை புரிந்திருந்தார்.

தற்போது அவரை காட்டிலும் ஒரு கோல் அதிகம் புகுத்தி ஹெரி கேன் அந்தச் சாதனையை முறியடித்துள்ளர். இங்கிலாந்தை சேர்ந்த ஹெரி கேன் ஜெர்மன் நாட்டின் 60 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here