தொழுகை நேரத்தில் ஹனுமான் பாட்டை போட்டதால் கடைக்காரர் மீது தாக்குதல்- பெங்களூரில் சம்பவம்

பெங்களூர்:

ற்போது உலகவாழ் இஸ்லாமியர்களால் புனித ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழுகை நேரத்தில் ஹனுமான் பாட்டை போட்ட கடைக்காரர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் பெங்களூரின் சித்தன்னா லே அவுட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

“நான் ஹனுமான் பஜனையை போட்டிருந்தேன். அப்போது, நான்கைந்து பேர் வந்து தொழுகை நேரத்தில் பாடல்களை கேட்டால் அடிப்போம் என்று மிரட்டினர். அவர்கள் என்னை அடித்து, கத்தியால் குத்திவிடுவோம் என்று மீண்டும் மிரட்டினர்” என்று அந்த கடைக்காரர் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு கூறியுள்ளார்.

இந்நிலையில் , குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் இருவர் முஸ்லிம்கள் மற்றும் ஒருவர் இந்து என்றும், ஏனைய மூன்று குற்றவாளிகளும் தலைமறைவாக உள்ளதாக மத்திய டிசிபி தெரிவித்துள்ளார்.

“ஹனுமான் சாலிசா இசைக்கப்பட்டதா என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம். புகாரில் ஹனுமான் சாலிசா பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடைக்காரரை தாக்கிய குழுவில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் அடங்குவர்” என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here