மார்ச் 19 ஆம் தேதி நிலவரப்படி, 6.03 மில்லியன் மலேசியர்கள் PADUவில் பதிவு

கோலாலம்பூர்:

நேற்றைய (மார்ச் 19) நிலவரப்படி, 6.03 மில்லியன் மலேசியர்கள் அல்லது 27.4 விழுக்காட்டினர் மத்திய தரவுத்தள மையத்தில் (PADU) பதிவு செய்துள்ளனர் என்று, டத்தோ ஹனிஃபா ஹஜர் தைப் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கிராமப்புறங்களில் PADUவுக்கான பதிவுகளை அதிகரிக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருவதாக துணைப் பொருளாதார அமைச்சர் இன்று (மார்ச் 20) நாடாளுமன்றத்திக் தெரிவித்தார்.

மேலும், இப்பதிவுகளை விரைவுபடுத்துவதற்காக 911 பொருளாதார டிஜிட்டல் மையங்கள், 27 நகர்ப்புற உருமாற்ற மையங்கள் (UTC) மற்றும் கிராமப்புற உருமாற்ற மையங்கள் (RTC), சுகாதார அலுவலகங்கள் மற்றும் மாநில மற்றும் நாடாளுமன்ற சேவை அலுவலகங்கள் போன்ற பல்வேறு இடங்களில் அரசு PADU கவுன்டர்களை திறந்துள்ளது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here