சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஜோகூர் மந்திரி பெசார்

ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி, வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் (NSE) சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவிய காணொளி வைரலானது. ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) பிற்பகல் குளுவாங்கில் ஒரு நிகழ்ச்சியிலிருந்து ஜோகூர் பாருவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஓன் ஹபீஸ், விரைவுச் சாலையில் முகம் குப்புற படுத்துக் கொண்டிருந்த ஒருவரை கண்டார்.

அப்போது அவருடன் இருந்த ஜோகூர் முதலீடு, வர்த்தகம், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் மனித வளக் குழுத் தலைவர் லீ டிங் ஹான், ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருந்தபோது பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்யும் மந்திரி பெசாரின் புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றினார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் NSE யின் KM25.3 தெற்குப் பகுதியில் இந்த விபத்து நடந்ததாக கூலாய்  மாவட்ட காவல்துறைத் தலைவர்  டான் செங் லீ தெரிவித்தார். 20 வயதுடைய ஒருவர் ஓட்டிச் சென்ற காருடன் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதனால் 24 வயதான மோட்டார் சைக்கிளோட்டிக்கு கால், கை மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன என்று அவர் கூறினார். ஆனால் கார் ஓட்டுநர் காயமடையவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here