பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாகும் வனிதா மகன்

நடிகை வனிதா விஜயகுமார் – ஆகாஷ் தம்பதியின் மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரி. இந்நிலையில் வனிதா-ஆகாஷ் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக விவாகரத்து பெற்று உள்ளனர்.

இதனால் விஜய் ஸ்ரீஹரி தனது அப்பா ஆகாஷுடன் வசித்து வருகிறார். தற்போது விஜய் ஸ்ரீஹரி வாலிபனாக வளர்ந்து ஹீரோ தோற்றத்தில் உள்ளார்.லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் ஸ்ரீஹரியின் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலவித ‘கமெண்ட்ஸ்கள்’ பதிவிட்டனர். அதில் அவரது மாமா அருண் விஜய் போன்று இருப்பதாக கூறி உள்ளனர்.

அழகான தோற்றத்தில் பிட்டாகவும் , ஹேண்ட்சம் ஆகவும் இருக்கிறார் என வர்ணித்தும் உள்ளனர்.இந்தி நடிகர் ரன்பீர் கபூர் தோற்றத்தில் இருப்பதாகவும் கூறி உள்ளனர். வனிதாவின் ஜாடை போன்றும் தாத்தா விஜயகுமார் இளம்வயது தோற்றம் போன்று அவர் இருப்பதாகவும் கூறி உள்ளனர்.

விஜய் ஸ்ரீஹரியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை விரைவில் சினிமாவில் எதிர்பார்க்கலாம் என கூறி உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் ‘என்ட்ரி’ கொடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து பிரபல இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் ஸ்ரீஹரி கதாநாயகனாக அறிமுகம் ஆக உள்ளார் என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here