வயிற்றுவலிக்குப்பின் வாந்தி; உயிருள்ள புழுவைக்கண்டு அதிர்ந்த ஆடவர்

வயிற்றுவலி, குமட்டல் என வேதனையில் இருந்த ஆடவர், தனக்கு மருந்து வேண்டும் என மருந்தாளர் ஒருவரை நாடினார்.

இரவில் மருந்தை உட்கொண்டதை அடுத்து மறுநாள் காலை வாந்தி எடுக்கும் உணர்வு அவருக்கு ஏற்பட்டது.

கழிவறைக்குச் சென்ற அவர், வாந்தி எடுத்தபோது உயிருடன் ஒரு புழு வாய்வழியாக வெளியே வந்து விழுந்தது.

இச்சம்பவம் குறித்து அந்த மருந்தாளர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

“வயிற்றுவலியுடன் வந்த அந்த ஆடவரிடம், ‘எப்போது கடைசியாக நீங்கள் குடற்புழு நீக்கம் (deworming) செய்தீர்கள்?’ என்று கேட்டேன். பல ஆண்டுகளாகிவிட்டதாக அவர் பதிலளித்தார். நான் அவருக்கு ‘வர்மோக்ஸ்’ தந்தேன்,” என்று காணொளியுடன் அந்த மருந்தாளர் பதிவிட்டிருந்தார்.

கழுவும் தொட்டியில் உயிருடன் ஒரு புழு நெளிந்துகொண்டிருப்பதைக் காணொளியில் பார்க்க முடிந்தது.

காணொளியை இதுவரை ஒன்பது மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

இதற்கிடையே, தங்களுக்கும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது என்று இணையவாசிகள் பதிவிடத் தொடங்கிவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here