தைவான் நிலநடுக்கம்: சிங்கப்பூரர்கள் இருவர் மாயம்!

தைப்பே:

தைவானில் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 3) நடந்த பாரிய நிலநடுக்கத்தில் சிங்கப்பூரர்கள் இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பேயில் உள்ள சிங்கப்பூர் வர்த்தக அலுவலகம் அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களுக்கு தூதரக உதவி வழங்கப்பட்டு வருவதாகவும் நேற்று (ஏப்ரல் 5) சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

மேலும் அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருவதாக அமைச்சின் பேச்சாளர் விளக்கினார்.

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஏப்ரல் 4ஆம் தேதி 71 வெளிநாட்டவர் மீட்கப்பட்டனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் கூறியது. இதில் சிங்கப்பூரர்கள் எண்மரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களில் இருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் தேவையான உதவி வழங்கியுள்ளனர் என்றும் அமைச்சு தெரிவித்தது.

தைவானிய அதிகாரிகளால் மீட்கப்பட்ட எண்மர் பற்றி வெளியுறவு அமைச்சு அறிந்துள்ளதாகவும் அவர்களுக்கு தூதரக உதவி வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here