பந்திங் மற்றும் கிள்ளான் பகுதியில் காற்றுத் தூய்மைக்கேடு

கோலாலம்பூர்:

இன்று காலை 9 மணி நிலவரப்படி, சிலாங்கூரில் உள்ள இரண்டு பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகளில் ஆரோக்கியமற்ற அளவுகளில் பதிவாகியுள்ளன.

காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS) படி, கிள்ளானில் காற்றின் தரம் API 139 ஆக இருந்தது, அதே சமயம் பந்திங்கில் API 163 ஆக இருந்தது.

இது தவிர நாட்டிலுள்ள ஏனைய 48 பகுதிகளிலும் API குறியீடு 51 முதல் 100 வரை உள்ளதாக கூறப்படும் நிலையில் புத்ராஜெயா, செராஸ் பகுதிகளில் முறையே 95,96 API குறியீடுகள் பதிவு செய்யப்பட்டது.

0 முதல் 50 என்பது ஆரோக்கியமானதாகவும் 50 முதல் 100 வரை மிதமான காற்று தரம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here