பெட்டாலிங் ஜெயா:
16 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று (ஏப்ரல் 7) காலை 9.44 மணியளவில் அனிஸ் ஜூலைகா அப்துல் அசிம் என்ற சிறுமி, காணாமல் போனதாக போலிச்சார் புகாரைப் பெற்றதாக பெட்டாலிங் ஜெயா OCPD துணை ஆணையர் ஷாருல் நிஜாம் ஜாஃபர் தெரிவித்தார்.
“கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர் கடைசியாக சனிக்கிழமை (ஏப்ரல் 6) மதியம் 2.30 மணியளவில் ஆரா கிரீன்ஸ், ஆரா டாமான்சாராவில் உள்ள அவரது காண்டோமினியத்தில் காணப்பட்டார்,” என்று, அவர் இன்று (ஏப்ரல் 9) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
குறித்த சிறுமி இருக்கும் இடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பெட்டாலிங் ஜெயா காவல்துறை தலைமையகத்தின் செயல்பாட்டு மையத்தை 03-7966 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.