மலாக்காவின் சில பகுதிகளில் திடீர் வெள்ளம்; 57 வீடுகள் சேதம்

மலாக்கா: 
நேற்று இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையைத் தொடர்ந்து, மலாக்கா மாநிலத்தில் உள்ள இரண்டு பகுதிகளில்  திடீர் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டது, இதில் தென் மலாக்கா மற்றும் அலோர் கஜாவில் குறைந்தது 57 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளாக பெம்பான் மாநில சட்டமன்றத்தில் உள்ள கம்போங் காபம் மற்றும் கம்போங் புக்கிட் தம்புன், கம்போங் பாரிட் மெலானா மற்றும் டுரியான் துங்கலில் உள்ள கம்போங் புக்கிட் பாலாய் என்பன அடங்கும் என்று, மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் மலாக்கா மாநில இயக்குநர் , லெப்டினன்ட் கர்னல் (PA), கமாருல்சியா முஸ்லிம் கூறினார்.
“நேற்று மாலை 6.30 மணி நிலவரப்படி, கம்போங் காபத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 16 வீடுகள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் கம்போங் புக்கிட் தம்புன் மற்றும் கம்போங் புக்கிட் பாலாயில் உள்ள தலா மூன்று வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிலையில் இரவு 8 மணி நிலவரப்படி, தென் மலாக்காவில், 28 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, தாமான் மெலாவிஸ் புக்கிட் பெருவாங்கில் 2, ஆயர் கெரோஹ்வில் 2 மற்றும் கம்போங் சுங்கை புட்டாட்டியில் 5 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
“வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு அங்கு ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளதாகவும்” அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here