ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு; 6,034 ஒப்பந்த ஆசிரியர்கள் பணியமர்வு

கோலாலம்பூர்:

நாட்டில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் மொத்தம் 6,034 ஒப்பந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சுமார் 20,000 பள்ளி ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், அதனை தீர்க்கும் முன்முயற்சியாக இந்த ஒப்பந்த ஆசிரியர்களின் பணியமர்வு மேற்கொள்ளப்பட்டது என்று, கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையில்ப்மொத்தம் 1,858 ஒப்பந்த ஆசிரியர்கள் இடைநிலைப் பள்ளிகளிலும், 4,176 பேர் தொடக்கப் பள்ளிகளிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று, அது ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here