அதிமுகவுக்கு “பூஜ்யம்?”.. அது கருத்துக்கணிப்பே இல்ல.. திணிப்பு

சேலம்: பொய்யான கருத்துக்கணிப்புகள் வெளியிட படுவதாகவும், அது கருத்துக்கணிப்பு இல்லை கருத்து திணிப்பு என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் லோக்சபா தேர்தகுக்கான பரப்புரை இன்று மாலையுடன் முடிவடைகிறது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கருத்துக்கணிப்புகள்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளின்படி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பெரும்பாலான இடங்களில் வெற்றி வாய்ப்பை பெறும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தி டிவி நடத்திய இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திமுக 34 தொகுதிகளை வெல்லக்கூடும், ஐந்து தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 1 தொகுதியில் பாஜக வெல்ல வாய்ப்பு எனவும் தந்தி தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதிமுக ஜீரோ: அதிமுக தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை என இந்தக் கருத்துக்கணிப்பு சொல்கிறது. கள்ளக்குறிச்சியில் அதிமுக மற்றும் திமுக இடையேயும், பொள்ளாச்சியில் திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையே கடும் போட்டி நிலவலாம் என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், 10 இடங்களில், பாஜக கூட்டணி, அதிமுகவை முந்தி இரண்டாம் இடம் பிடிக்கும் என்றும் தந்தி டிவி கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட இல்லை என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாஜக, அதிமுகவை முந்தினால், அதிமுக நிலை மோசமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

கருத்துக்கணிப்பு பற்றி எடப்பாடி ஆவேசம்: இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “சில ஊடங்கங்கள் பொய்யான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றன. அது கருத்து கணிப்பு இல்லை கருத்து திணிப்பு. லோக்சபா தேர்தல் கருத்துக்கணிப்புகளை பொருட்படுத்த வேண்டியதில்லை. மக்களுக்கான சேவையை அதிமுக அளித்து வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். மக்கள் எதிர்பார்க்கிற வெற்றி கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

எந்த பயனும் இல்லை: தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் அடிக்கடி தமிழகம் வந்து செல்வதால் எந்த பயனும் இல்லை. அவரும், மத்திய அமைச்சர்களும் தமிழகத்திற்கு வரும்போது ஏதாவது ஒரு திட்டத்தை துவக்கி வைத்து சென்றிருந்தால், ஏதாவது பயன் கிடைத்திருக்கும். தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் அதிகமான நிதி பெற்றிருக்கிறது. திமுக 650 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் பெற்று இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here