பிட்காயின் பகுதியாக்குதல்; ஹாஃவிங் என்றால் என்ன? முழு விளக்கம்!

பிட்காயின்களில் பகுதியாக்குதல் என்ற திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் அதன் மதிப்பு மேலும் பல மடங்கு உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆன்லைன் வர்த்தகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2009ம் ஆண்டு சந்தோசி மகாமோடோ என்ற புனைப்பெயர் கொண்ட மர்ம நபரால் பிட்காயின் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகில் உள்ள அனைத்து நாடுகளின் கரன்சிகள் மற்றும் பணத்திற்கு மாற்றாக இந்த புதிய பிட்காயின் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.

பிளாக் செயின் என்ற தொழில் நுட்பத்தின் மூலமாக தொழில்நுட்ப வல்லுநர்கள் பிளாக்குகளை உருவாக்கி அதன் மூலம் அதற்கு மதிப்பு உருவாக்குவதே இந்த பிட்காயின் திட்டமாகும். சுமார் 21 மில்லியன் டோக்கன்களை உருவாக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

தற்போது ஒரு லட்சத்து 90 ஆயிரம் பிளாக்குகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் ஒரு பிட்காயினின் விலை சுமார் 73,803. 25 அமெரிக்க டாலர்கள் விலை என நிர்ணயிக்கப்பட்டு ஆன்லைனில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. பிட்காயின் திட்டத்திற்கு பல்வேறு நாடுகளும் அங்கீகாரம் மறுத்துள்ள நிலையில், சில நாடுகள் மட்டும் அதனை வரைமுறைப்படுத்த திட்டங்களை வகுத்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா சமீபத்தில் பிட்காயின் நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் கொடுப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிட்காயினின் மதிப்பு சரசரவென சரிந்தது. 64,000 அமெரிக்க டாலருக்கும் கீழ் தற்போது பிட்காயின் விலை சரிந்துள்ளது. இதனை சீர் செய்யும் வகையிலும், பிட்காயின்களின் விலை ஏற்றத்தை அதிகப்படுத்தவும், ஹாஃவிங் எனப்படும் பகுதியாக்குதல் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. இதன்படி தற்போது இரண்டு லட்சத்தி பத்தாயிரம் பிளாக்குகளாக உள்ள பிட்காயின்களின் தொகுதிகள் பாதியாக குறைக்கப்பட உள்ளது.

இதன் மூலமாக தற்போது பயன்பாட்டில் இருக்கும் பிட்காயின்களின் விலை உயர்வதோடு, புதிய பிட்காயின்களின் உற்பத்தியும் குறைக்கப்படும்.

இருப்பினும் இது விலை குறைப்பை நிகழ்த்தலாம் எனவும் அஞ்சப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு முதல் முறையாக பகுதியாக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பிட்காயின்களின் மதிப்பு சுமார் 659 மடங்கு அதிகரித்து இருந்தது. இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பகுதியாக்குதல் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியான போதும், இதுவரை அது செயல்படுத்தப்படாததால் வரவிருக்கும் நாட்களில் எந்த மாதிரியான தாக்கத்தை இது ஏற்படுத்தும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் பெரிதும் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here