அடேங்கப்பா ஒரு புடவை இத்தனை லட்சமா?.. கீர்த்தி சுரேஷ் அட்ராசிட்டியை பார்த்தீங்களா

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் அவர் கடைசியாக சைரன் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்தச் சூழலில் இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்துக்கு கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த புடவையின் விலை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம்தான் தமிழில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் கீர்த்தியின் அளவான நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது.. இதனையடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

முன்னணி நடிகர்களுடன்: அதன்படி விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயனுடன் ரெமோ என வரிசையாக நடித்தார். தமிழில் அவர் கமர்ஷியல் படங்கள் நடித்தாலும் தெலுங்கில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார். அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை வென்றார். ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்பு வரவில்லை.

மீண்டும் தமிழில்: இப்படிப்பட்ட சூழலில் தமிழில் அவர் கடைசியாக சைரன் படத்தில் நடித்தார். மாரி செல்வராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக ரகு தாத்தா படம் ரிலீஸாகவிருக்கிறது. மேலும் அட்லீயின் தயாரிப்பிலும் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்துவருகிறார். மேலும் ரகுதாத்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் ஹிந்தி தொடர்பான வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஜெயம் ரவியுடன் சைரன் படத்தில் நடித்திருக்கிறார் அவர்.

பெரிய ரவுண்டு கனவு: கீர்த்தி சுரேஷுக்கு சமீபகாலமாகவே தமிழில் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி இல்லாத சூழலில் மாமன்னன் அதனை மாற்றி அமைத்தது. ஆனால் அந்த வெற்றி சைரன் படத்தில் நிலைக்கவில்லை. இருந்தாலும் ஹிந்தியில் நடிக்கும் படம், தமிழில் நடிக்கும் படங்கள் தனக்கு கைகொடுத்து மீண்டும் பெரிய ரவுண்டு வர வைக்கும் என்று நம்பிக்கையில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

புடவையின் விலை: இதற்கிடையே இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதில் அட்டகாசமான புடவையில் காட்சியளித்தார் கீர்த்தி. இந்நிலையில் அந்தப் புடவையின் விலை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் புடவையின் விலை கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், என்னங்க இது எப்போதும் சிம்ப்பிளாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் மூன்று லட்சம் ரூபாய்க்கு புடவை எடுத்திருக்காங்களா என்று ஆச்சரியத்துடன் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here