பாதுகாப்பு அமைச்சர் முஹமட் காலிட் இந்தோனேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம்

ஜகார்த்தா:

டத்தோஸ்ரீ முஹமட் காலிட் நோர்டின் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர், இந்தோனேசியாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பணிக்காக இன்று ஜகார்த்தா சென்றடைந்தார்.

இன்று முதல் இரண்டு நாட்கள் மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்தில், இந்தோனேசியாவின் புதிய பிரதமர் பிரபோவோ சுபியான்டோவை அவர் நாளை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் அவர் Pharmaniaga Bhd இன் துணை நிறுவனமான PT Millennium Pharmacon International Tbk க்கு இன்று விஜயம் செய்வார் என்றும், அதைத் தொடர்ந்து அங்குள்ள மலேசிய புலம்பெயர்ந்தோருடன் சந்திப்பு மேற்கொள்வார் என்றும், அவர் தானடி முகநூலில் வெளியிட்டுள்ள ஓர் பதிவில் தெரிவித்தார்.

இந்நிலையில், முஹமட் காலிட் மற்றும் அவரது தூதுக்குழுவினர் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் தங்கராங்கில் உள்ள சோகர்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்ததாக இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here