கூடுதல் ஆயுதங்கள் உற்பத்தி செய்து ராணுவத்தினருக்கு அனுப்பிவைக்க ரஷ்யத் தற்காப்பு அமைச்சர் உத்தரவு

மாஸ்கோ:

க்ரேனுக்கு எதிராகப் போரிட்டு வரும் தனது ராணுவத்துக்குக் கூடுதல் ஆயுதங்களை அனுப்பிவைக்க ரஷ்யா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கூடுதல் ஆயுதங்களை உற்பத்தி செய்து விரைவாக அனுப்பிவைக்கும்படி ரஷ்ய ஆயுத ஆலைகளுக்கு அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் செர்கே ஷொய்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

உக்ரேனின் நிலப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியை மட்டுமே ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

“உக்ரேனுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரம் குறையாமல் தொடர ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கையும் அவற்றின் தரமும் மிகவும் முக்கியம்,” என்று தற்காப்பு அமைச்சர் ஷொய்கு தெரிவித்ததாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு டெலிகிராம் தளத்தில் பதிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here