கோலா குபு பாரு:
பத்தாங் காலி ஜாலான் கெந்திங் லாமாவில் உள்ள ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்த தந்தை மற்றும் அவரது இரு மகன்கள் கொண்ட குடும்பத்தினரை பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடும் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் நேற்று சந்தித்தனர்.
குறித்த துன்பகரமான செய்தியைப் கேட்டவுடன், இரு வேட்பாளர்களும் உடனடியாக கோலா குபு பாரு மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு வந்து, தங்களின் இரங்கலைத் தெரிவித்தனர்.
முன்னதாக, பத்தாங்காலி கம்போங் குவாந்தானில் இருந்து அங்கு குளிக்க சென்ற, 43 வயது தந்தையும் 9 வயது பெண் பிள்ளையும் 6 வயது ஆண் பிள்ளையும் நீரில் மூழ்கி மரணமடைந்தனர்.




















