30 ஆண்டுகளுக்குப் பிறகு சிரஞ்சீவி- அஜித் சந்திப்பு; மாஸ் புகைப்படங்கள்!

30 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர்கள் அஜித்- சிரஞ்சீவி ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

’விடாமுயற்சி’ படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் அஜித் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மூன்று விதமாக, வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக்கில் அஜித் இருக்கும் ‘குட் பேட் அக்லி’ போஸ்டரும் சமீபத்தில் வெளியானது. படப்பிடிப்பு தளத்தில் செம ஸ்மார்ட் லுக்கில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலானது. மேலும், படப்பிடிப்பு முடிந்ததும் அஜித் தன் பைக்கில் ரிலாக்ஸாக ரோடு டிரிப்பும் சென்றிருக்கிறார்.

இப்போது நடிகர் சிரஞ்சீவியை நேரில் சந்தித்து இருக்கிறார் அஜித். ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பும் சிரஞ்சீவியின் ‘விஸ்வாம்பரா’ படப்பிடிப்பும் அருகருகே நடந்திருக்கிறது. இதனால், இருவரும் நேற்று இரவு நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

சிரஞ்சீவி தெலுங்கில் நடித்திருந்த ‘பிரேம புஸ்தக’த்தில் அஜித்தும் இணைந்து நடித்திருப்பார். அதுதான் அவருடைய முதல் தெலுங்கு படம். அப்போது அஜித்தும் அஜித்தும் சிரஞ்சீவியும் சேர்ந்து புகைப்படம் எடுத்திருப்பார்கள். அதன் பிறகு, 30 ஆண்டுகளுக்கு பின் இப்போதுதான் இருவரும் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள் என்பதை சொல்லி நெட்டிசன்கள் இரண்டு புகைப்படங்களையும் இணைத்து பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here