ஜோகூர் ரவுண்டபோர்ட்டில் ஸ்போர்ட்ஸ் கார் தடம்புரண்டதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

கோலாலம்பூர்:

ஜோகூர், இஸ்கண்டார் புத்திரியில் உள்ள ரவுண்டபோர்ட்டில் ஸ்போர்ட்ஸ் கார் தடம் புரண்டதில் 41 வயது நபர் உயிரிழந்தார், அவரது நண்பர் லேசான காயமடைந்தார்.

இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவத்தின் போது, வெள்ளை நிற நிசான் ஜிடிஆர் காரின் சக்கரத்தில் சிக்கிய ஆடவர் தலை மற்றும் வலது காலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதேநேரத்தில் அவரது 36 வயது நண்பர் முழங்கையில் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்று, இஸ்கண்டார் புத்திரி போலீஸ் தலைவர் துணை ஆணையர் எம். குமரேசன் தெரிவித்தார்.

விபத்து குறித்து அதிகாலை 4 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது என்றும், முதற்கட்ட விசாரணையில் இருவரும் புத்திரி துறைமுகத்தில் இருந்து கெலாங் பாத்தாஹ் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர் என்றும், கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் சறுக்கி விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறினார்.

கவனக்குறைவாக அல்லது ஆபத்தான வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here