கோலாலம்பூர்:
கோலாலம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து, ஜாலான் டூத்தா டோல் சாவடி அருகே சாலைத்தடுப்பில் மோதி தடம் புரண்டது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட எழுவர் லேசான காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 6.17 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கோலாலம்பூர் தீயணைப்புப் படையின் நடவடிக்கை பிரிவு இயக்குநர் முஹமட் யுஸ்ரி அஜிஸ் கூறினார்.
மேலும் பேருந்து விபத்தில் காயமறைந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று அவர் சொன்னார்.