கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவளித்த பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாகஅவரவர் தொகுதிகளை காலி செய்ய சபாநாயகருக்கு பெர்சாத்து கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனை அக் கட்சியின் துணை தலைவர் ரொனால்ட் கியாண்டே உறுதிப்படுத்தினார்.
கடந்த தேர்தலில் பெர்சாத்து கட்சியை பிரதிநிதித்து போட்டியிட்ட சம்பந்தப்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர். ஆனால் அவர்கள் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததால் அவர்கள் பெர்சாத்து கட்சியின் உறுப்பினர் அந்தஸ்தை இழந்து விட்டனர் என்று தெரிவித்து மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துலுக்கு பெர்சாத்து கட்சி அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியது.
குறித்த கடிதத்தில் சம்பந்தப்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொகுதிகளையும் காலி செய்ய வலியுறுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.




















