தென்கொரியாவில் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 22 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்துள்ளனர்.

இன்று முற்பகல் சியோலுக்கு தெற்கே உள்ள ஹ்வாசோங் நகரில் உள்ள தொழிற்சாலையின் இரண்டாவது மாடியில், தொழிலாளர்கள் பேட்டரிகளை சோதித்து பேக்கேஜிங் செய்து கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது. திடீரென பேட்டரிகள் வெடித்ததை அடுத்து, தீ விபத்து ஏற்பட்டது என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
1719236100-0/South-Korea-Lithium-Factory-Fire-(1)1719236100-0.jpeg)
அரிசெல் என்ற பிரபல பேட்டரி நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலை கட்டிடத்தில் தீ விபத்து நேர்ந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலையில் 102 பேர் பணிபுரிந்ததாகவும், விபத்தில் பலியானோர் மற்றும் காயமடைந்தோருக்கு அப்பால் பலரைக் காணவில்லை எனவும் தெரிய வந்திருக்கிறது. பிரதம மந்திரி ஹான் டக்-சூ, உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர் லீ சாங்-மின் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை உடனடியாக பார்வையிட்டனர்.





















