தமிழ்ப் பள்ளியை நோக்கி மாபெரும் மோட்டார் சைக்கிள் பயணம்; பாயா ரும்புட் தமிழ்ப்பள்ளியில் அணி திரண்ட “பைக்கர்ஸ்”

( ரெ. மாலினி )

மலாக்கா:

பாயா ரும்புட் தமிழ்ப்பள்ளி நூலகத்திற்கு நிதி சேர்க்கும் பணியில் மலாக்கா Majestic Motorcycle club ஏற்பாட்டில் பெரும் மோட்டார் சைக்கிள் சவாரி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

Unity Brothers group, பினாங்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் உடன் சேர்ந்து தமிழ் மொழியையும் ,தமிழ்ப் பள்ளியைக் காக்கும் வண்ணம் இந்த அர்த்தம் மிக்க பயணத்தை மலாக்கா லிட்டல் இந்தியா சாலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்கினர்.

136 மோட்டார் ஓட்டிகள் உடன் 148 பயணிகள் பயணம் செய்த இக்குழு பாயா ரும்புட் தமிழ் பள்ளியில் சங்கமமாகி பள்ளி நூலகத்திற்கு தேவையான குளிரூட்டிகள்,தொலைகாட்சி பெட்டி, நூலக மேசைகள் நாற்காலிகளை வழங்க இந்த முயற்ச்சி மேற்கொண்டனர்.

மோட்டார் சைக்கிள் சவாரி பயணத்தின் வழி திரட்டப்பட்ட நிதியில் அப்பொருட்கள் வாங்கப்படுவதாக மலாக்கா Majestic Motorcycle club தலைவர் இரா,சரவணன் கூறினார்.

நாடு தழுவிய நிலையில் இருந்து அணி திரண்டு வந்து எங்களது தோள் கொடுத்த அனைத்து மோட்டார் சைக்கிளில் குழுவிற்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இந்த மோட்டார் சைக்கிள் குழுவின் தோற்றுனர் பிரகாஷ் இது போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் தாயிற்கு பெருமைச் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்றார்.

விழாவிற்கு ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் இக்குழுவினருடன் உடன் பயணித்து வந்த நிகழ்ச்சியின் சிறப்பு வருகையாளரான மலாக்கா போலீஸ் தலைமையக வணிகக் குற்றவியல் தடுப்பு பிரிவின் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் ஏ.சுந்தரராஜன் பேசுகையில் இந்த நிகழ்ச்சி ஒற்றுமையின் வழி திரண்ட மாபெரும் வெற்றி என புகழாரம் சூட்டினார்.

மாணவர்கள் அனைவரும் பள்ளி பாடத்துடன் இணை பாடத்திட்ட செயல்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். 40 வயதுக்குப் பிறகு, வாழ்க்கை வெற்றுத்தனமாக உணர்வீர்கள். மனச்சோர்வு அடையும் வாய்ப்பு ஏற்பட்டால் நம்மை உற்சாகப் படுத்திக் கொள்ளவும். மன அழுத்தத்தைத் தணிக்கவும், ஓய்வெடுக்கவும், பழைய நண்பர்களைக் கண்டறியவும் நமது பழைய நினைவுகளைத் திரும்பிப் பார்க்க, கடவுளின் படைப்பை ஆராயும் நேரம் இந்த மோட்டார் சவாரி திகழ்கிறது என்றார்.

எங்களது மோட்டார் சைக்கிள் பயணத்தில் சுதந்திரமாக சவாரி செய்கிறோம் என தனது தலைமையுரையில் அவர் பேசினார்.

வணிக குற்றவியல் குறித்த விழிப்புணர்வு குறித்து ஆலோசனை வழங்கிய அவர் 500 வெள்ளி பெறுமானமுள்ள புத்தகங்களைப் பள்ளியின் நூலகத்திற்கு இலவசமாக வழங்கினார்.

சுற்றுச் சூழலைப் பாதுகாத்து , பசுமையை நேசிப்போம் என்ற வாசகத்திற்கு உயிர்பிக்கும் வகையில் மரக்கன்றுகளைப் பள்ளி வளாகத்தில் அனைவரும் நட்டனர், பாயா ரும்புட் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தெரசா ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here