அலோர் ஸ்டார்:
புக்கிட் காயு ஈத்தாம் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு உரிமம் பெற்ற எரிபொருள் மொத்த விற்பனையாளர் வளாகத்தில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது, கடத்தப்பட்டதாக நம்பப்படும் 6,130 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோலை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் (KPDN) கெடா கிளையினர் கைப்பற்றினர்.
KPDN குபாங் பாசு அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழு காலை 8.30 மணியளவில் நடத்திய சோதனையில், 37 வயதான உள்ளூர் ஊழியர் ஒருவர் வெளிநாட்டு பதிவு எண் தகடுகள் கொண்ட இரண்டு டிரெய்லர்களின் டேங்கில் டீசல் மற்றும் பெட்ரோலை நிரப்புவது கண்டுபிடிக்கப்பட்டது என்று KPDN இயக்குனர் முஹமட் து நிஜாம் ஜமாலுதீன் கூறினார்.
“குறித்த சோதனையில் மாற்றியமைக்கப்பட்ட கூடுதல் டேங்கில் 2,148 லிட்டர் டீசல் மற்றும் 3,982 லிட்டர் பெட்ரோலைக் கண்டுபிடித்தோம். கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு RM 230,300 ஆகும்,” என்று அவர் இன்றுவெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
விநியோகக் கட்டுப்பாடு சட்டம் 1961 (சட்டம் 122) பிரிவு 21 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.