கோலாலம்பூர்:
உள்ளூர் அதிகாரசபையின் விதிமுறைகளை மீறி, வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு வழங்கினால் வணிக உரிமங்கள் ரத்து செய்யப்படலாம் என பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்துறை உரிம விதிகளின் கீழ், வியாபாரிகள், சிறு வியாபாரிகள், வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள், உணவகங்கள், கார் பட்டறைகள் மற்றும் சந்தைக் கடைகள் ஆகியவற்றுக்கான உரிமங்களுக்கு விண்ணப்பிக்கவோ அல்லது வைத்திருக்கவோ வெளிநாட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
“விதிமுறைகள் இருந்தபோதிலும், குறைந்த தண்டனைகள் மற்றும் அமலாக்கமின்மை போன்ற காரணங்களால் அவை சட்ட மீறல்களுக்கு வழிவகுத்தன” என்று அமைச்சகம் நேற்று (ஜூலை 11) நாடாளுமன்றத்தின் இணையதளத்தில் எழுதப்பட்ட பதிலில் தெரிவித்துள்ளது.
“மேலும் இவ்வாறான வணிகங்களை வாடகைக்கு விடுபவர்களுக்கு எதிரான சட்டத்தை கட்டமைக்க அரசு ஆய்வு நடத்தி வருகிறது” என்றும் அது தெரிவித்துள்ளது.




















