மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம்: உலகளாவிய ரீதியில் முடங்கிய சேவைகள்

கோலாலம்பூர்:

ன்று மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக உலகளாவிய ரீதியில் பல நிறுவனங்கள் மற்றும் சேவைகள் முடங்கின.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமன்றி அந்நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருளை ஏராளமான இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் பெரும்பான்மையான மைக்ரோசாப்ட் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று நம்பப்படுகிறது.

மேலும் புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத் என காட்டுவதால் பயனாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியுள்ளன என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மலேசியாவில் விமான சேவைகள் மற்றும் வங்கி சேவைகள் செயல் இழந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும், ஊடகங்கள், வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆகியன இந்த செயலிழப்பை சந்தித்தன.

இது உலகளாவிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Crowdstrike இன் சிக்கலுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது என்றும், மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகளை பயன்படுத்தி வரும் விமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் போன்றவையும் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளன என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here