கஞ்சா பாவித்திருப்பதாக நம்பப்படும் சுற்றுலாப் பேருந்து ஓட்டுநர் கைது

அலோர் ஸ்டார்:

சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, ​​கஞ்சா பாவித்திருப்பதாக நம்பப்படும் ஒரு சுற்றுலாப் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

45 வயதான அந்த நபர், ஊத்தான் கம்போங் டோலில் நடந்த சுற்றுலா மற்றும் பொது போக்குவரத்து வாகனங்கள் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஏஜென்சி மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டார் என்று, கெடா JPJ இயக்குனர் ஸ்டைன் வான் லுடம் கூறினார்.

சனிக்கிழமை (ஜூலை 20) அதிகாலை 4 மணிக்கு, சந்தேக நபர் பினாங்கில் இருந்து தாய்லாந்திற்கு 42 பயணிகளுடன் ஓட்டிச் சென்றுள்ளார். அவருக்கு போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றப்பதிவுகளும் உள்ளன” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

போதைப்பொருள் (சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு) சட்டம் 1983 இன் பிரிவு 3 (1) இன் கீழ் சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டார், அதே நேரத்தில் குறித்த சுற்றுலாப் பேருந்து இரண்டாவது ஓடுநருடன் பயணத்தைத் தொடர்ந்தது என்றார்.

நேற்று தொடங்கிய இந்த நடவடிக்கையில் மொத்தம் 1,116 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. இதில், 138 வாகனங்கள் அமலாக்க நடவடிக்கைகளை எதிர்கொண்டன மற்றும் சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாததற்காக 329 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here