கோலாலம்பூர்:
கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இன்று நண்பகல் நிலவரப்படி 93.5 விழுக்காடு நீர் விநியோகம் மீட்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் நிறுவனமான ஆயிர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று ஜூலை 25, 2024 (வியாழன்) இரவு 8 மணிக்குள் குழு 2 இல் வகைப்படுத்தப்பட்டுள்ள இடங்களுக்கு நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும், அதே நேரத்தில் குழு 3 ற்கு நாளை ஜூலை 26, 2024 (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்குள் முழுமையாக சீரடையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அது தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.




















