கேட்டதை தரும் 10 சக்தி வாய்ந்த முருகன் மந்திரங்கள்

தமிழ் கடவுளான முருகப் பெருமான் சூரபத்மனுடன் போரிட்டு, வெற்றி பெற்றது ஐப்பசி மாத சஷ்டியில். முருகனின் அவதார நோக்கம் நிறைவேறிய திதி என்பதால் சஷ்டி, முருகனுக்குரிய திதியாக மாறியது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு முறை சஷ்டி திதி வரும். இந்த இரண்டு திதிகளிலும் விரதம் இருந்து முருகனை வழிபட அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால் அந்த பிரச்சனைகள் நீங்கி, வேண்டுதல் நிறைவேறும். குறிப்பாக குழந்தை, திருமணம், வேலை போன்ற பிரச்சனைகளுக்காக வேண்டிக் கொண்டு சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு நிச்சயம் முருகன் அருள் கிடைக்கும்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வளர்பிறை சஷ்டியானது ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமை வருகிறது. முருகப் பெருமானுக்குரிய இந்த நாளில் முருகப் பெருமானுக்குரியசக்தி வாய்ந்த மந்திரங்களை சொல்லி வழிபட்டால் முருகனின் பரிபூரண அருள் கிடைக்கும். சக்தி வாய்ந்த 10 முருக மந்திரங்களையும், அவைகள் தரும் பலன்களையும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சஷ்டியன்று சொல்லி வேண்டிய சக்திவாய்ந்த 10 முருக மந்திரங்கள்:

1. ஓம் சரவண பவ – பாதுகாப்பும், முருகன் அருளும் கிடைக்கும்
2. ஓம் ஷண்முகாய நமஹ – ஆன்மிக வளர்ச்சியும், ஞானமும் கிடைக்கும்.
3. ஓம் முருகனே நமஹ – அனைத்து நலன்களும், செல்வ வளமும் கிடைக்கும்.
4. வேலவா வேலவா – வெற்றி கிடைக்கும்
5. ஓம் குமாராய நமஹ – ஆரோக்கியம், மகிழ்ச்சி கிடைக்கும்.
6. ஓம் கந்தாய நமஹ – வலிமையும், உற்சாகமும் கிடைக்கும்.
7. ஓம் சுப்ரமண்யாய நமஹ – தடைகள் விலகும்
8. ஓம் வேலாயுதாய நமஹ – வேகமும், வளர்ச்சியும் ஏற்படும்.
9. ஓம் சுவாமிநாதாய நமஹ – முருகனின் கருணையும் ஆசியும் கிடைக்கும்
10. ஓம் சரவணபவ ஸ்ரீ முருகனே நமஹ – அளவில்லாத பாதுகாப்பும், அருளும் கிடைக்கும்.

மந்திரங்களை சொல்லும் முறை :

இந்த மந்திரங்கள் அனைத்தையுமோ அல்லது நம்முடைய தேவைக்கு ஏற்பவோ சஷ்டி நாளில் மட்டுமின்றி தினமும் சொல்லி வரலாம். இவற்றை 108 என்ற எண்ணிக்கையில் சொல்லலாம். முடியாதவர்கள் 21 முறையாவது சொல்ல வேண்டும். இந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் உடல், மனம் மற்றும் ஆன்மா தூய்மை அடைவதுடன், முருகப்பெருமானின் குணங்களான ஞானம், பலம், உற்சாகம் போன்ற குணங்கள் நமக்கும் ஏற்படும். தடைகள் விலகி, எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். இந்த மந்திரங்களை இந்த நேரத்தில் தான் சொல்ல வேண்டும் என எந்த கட்டாயமும் கிடையாது. எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் சொல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here