புதுடில்லி: உலகின் மிகச்சிறிய வேக்வம் கிளீனர் உருவாக்கிய பீகார் மாணவர் தபலா நடமுனி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த 23 வயது மாணவர் தபால நடமுனி. இவர் பல்வேறு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தற்போது, உலகின் மிகச்சிறிய வேக்வம் கிளீனர் உருவாக்கி, உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இது விரல் நகத்தை விட சிறியது. அதன் குறுகிய அச்சு 0.65 செமீ (0.25 அங்குலம்) உள்ளது.
இவர் இதனை உருவாக்க இரண்டு ஆண்டுகள் செலவிட்டுள்ளார். ஏற்கனவே இவர் உருவாக்கிய, வேக்வம் கிளீனர் சாதனத்தை மறுவடிவமைப்பு செய்து, வெறும் 0.65 செ.மீ., அளவுள்ளதாக மாற்றியுள்ளார். ‘எங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களும் இந்த சிறிய கிளீனரைப் பார்த்து வியந்தனர். ஆசிரியர்கள் பார்த்து மிகவும் மகிழ்ந்தனர். இது மிக சிறிய அழகான படைப்பு என்று என்னிடம் கூறினர்’ என்று தபால நடமுனி தெரிவித்தார்.
வேக்வம் கிளீனரில் நான்கு வோல்ட் அதிர்வு மோட்டார் மூலம் இயக்கப்படும் ஒரு சிறிய சுழலும் விசிறி, தூசி துகள்களை எளிதில் அகற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.