வேலை போற்றும் பாடல்

வேல் மாறலை போன்றே மிகவும் சக்தி வாய்ந்த, பல அதிசயங்களை நிகழ்த்தக் கூடிய பாடல் தான் சத்திர பந்தம். முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாம்பன் சுவாமிகள் பல பாடல்களை பாடி உள்ளார். இவர் முருகப் பெருமானின் வேலை புகழ்ந்து சித்திரக் கவி வடிவில் பாடியது தான் சஸ்திர பந்தம். இதை வரிசைப்படுத்தி எழுதினால் வேல் வடிவம் தோன்றும். இதை படிப்பவர்களுக்கு கவசம் போல் இருந்து காப்பதுடன், எதிர்மறை எண்ணங்களை போக்கி, அளவில்லான பல நன்மைகளை தரும்.அஸ்திரம் என்றால் இருக்கும் இடத்தில் இருந்து இலக்கை நோக்கி ஆயுதத்தை ஏவுவது.

சஸ்திரம் என்றால் எப்போதும் நமக்கு கவசமாக இருந்து நம்மை காப்பது என்று பொருள். இந்த பாடலை பாராயணம் செய்வதால் தொழிலில் வளர்ச்சி, செல்வ செழிப்பு, நோய் தீருதல், ஞானம் கிடைத்தல், தீமைகள் நெருங்க விடாமல் செய்தல், நினைத்ததை நிறைவேற்றுதல் போன்ற பல நன்மைகளை தரும். வேல் வடிவில் இருக்கும் இந்த சஸ்திர பந்தத்தை கடையில் வாங்கி வைத்தும் வழிபடலாம். முடியாதவர்கள், இந்த மந்திரத்தை மட்டும் படித்தால் கூட போதும்.

வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பாமாலைபூ ணேமதிற மால்வலர்தே-சாலவமாபாசம் போக மதிதேசார் மாபூதம்வாபாதந் தாவேல வா.
பாடலின் விளக்கம் – தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே..பேரின்பமெனும் அனுபவத்திற்கு தலைவனாக இருப்பவனே, மாலைகளை அணியும் செம்பொன் போல் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே…என்னுடைய மனத்தில் நிறைந்திருக்கும் தேவையல்லவைகளையும், பெரிய ஆணவங்கள், பந்தங்கள் போன்றவை ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க. உன்னுடைய திருவடிகளாகிய செல்வத்தை எனக்கு தந்தருள வேண்டும்.

சஸ்திர பந்தத்தை பாராயண செய்ய துவங்குவதற்கு முன் அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் போன்ற குருமார்களை வணங்கி விட்டு, முருகனின் சன்னதியில் படிக்க துவங்க வேண்டும். செவ்வாய்கிழமை, கிருத்திகை, விசாகம், சஷ்டி ஆகிய நாட்களில் படிக்க துவங்குவது நல்லது. தினமும் 27 முறை இதை பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் உள்ள முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து, இதை படிக்க வேண்டும். வேல் வைத்து வழிபடுபவர்கள், சஸ்திர பந்தம் வாங்கி வைத்து வழிபடுபவர்கள் வேலுக்கு முதலில் பூஜை செய்து விட்டு இந்த சஸ்திர பந்தத்தை படிப்பது சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here