புனித சிவபுரி கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியனின் திருமணம் நடைப்பெற்றது

இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களால் வைரலாகி மக்கள் மனதில் பரீட்சையமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதை தொடர்ந்து விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப பட்ட குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

இந்நிலையில் கடந்த வாரம் நடிகை ரம்யா பாண்டியன் யோகா ஆசிரியரான லோவல் தவானை திருமணம் செய்யவுள்ளதாக ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியை கொடுத்தார். ரம்யா பாண்டியனுக்கும் லோவல தவானுக்கும் ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதிக்கரையில் திருமணம் இன்று நடைப்பெற்றது.

மிகவும் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் அவர்களின் திருமணம் நடைப்பெற்றது. ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு பெங்களூரில் உள்ள யோகா பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். அங்கு சர்வதேச யோகா பயிற்சியாளராக பணியாற்றிவர் லோவல் தவான். இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு பின் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைப்பெற்றுள்ளது.

நடிகை கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வன் திருமணவிழாவில் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர்களின் ரெசெப்ஷன் சென்னையில் வரும் நவம்பர் 15 ஆம் தேதி நடைப்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here